TNPSC Group-IV Syllabus Tamil 2025
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்)
[பொது அறிவு (75 கேள்விகள்), திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (25 கேள்விகள்) மற்றும் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (100 கேள்விகள்) அடங்கிய ஒரு தாள்)]
குறியீடு:496
Group-IV Exam Pattern 2025
|
Detailed Group-IV Exam Pattern 2025
Unit-No |
Topic |
No Of Questions |
Part A: General Studies |
||
Unit I |
General Science |
5 |
Unit II |
Geography |
5 |
Unit III |
History, Culture of India, and Indian National Movement |
10 |
Unit IV |
Indian Polity |
15 |
Unit V |
Indian Economy and Development Administration in Tamil Nadu |
20 |
Unit VI |
History, Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu |
20 |
Part B: Aptitude and Mental Ability |
||
Unit I |
Aptitude |
15 |
Unit II |
Reasoning |
10 |
Part C: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு |
||
Unit I |
இலக்கணம் |
25 |
Unit II |
சொல்லகராதி |
15 |
Unit III |
எழுதும் திறன் |
15 |
Unit IV |
கலைச் சொற்கள் |
10 |
Unit V |
வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் |
15 |
Unit VI |
எளிய மொழி பெயர்ப்பு |
5 |
Unit VII |
இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் |
15 |
Total Questions |
200 |
பகுதி அ: பொது அறிவு (பத்தாம் வகுப்புத் தரம்)
அலகு 1: பொது அறிவியல் (5 கேள்விகள்)
இயற்பியல்
- பேரண்டத்தின்
இயல்பு
– இயற்பியல்
அளவுகளின்
அளவீடுகள்
– இயக்கவியலில்
பொது
அறிவியல்
விதிகள்
– விசை,
அழுத்தம்
மற்றும்
ஆற்றல்
– அன்றாட
வாழ்வில்
இயந்திரவியல்,
மின்னியல்,
காந்தவியல்,
ஒளி,
ஒலி,
வெப்பம்
மற்றும்
அணுக்கரு
இயற்பியலின்
அடிப்படை
கோட்பாடுகளும்
அதன்
பயன்பாடுகளும்;
வேதியியல்
- தனிமங்களும்
சேர்மங்களும்,
அமிலங்கள்,
காரங்கள்,
உப்புகள்,
பெட்ரோலிய
பொருட்கள்,
உரங்கள்,
பூச்சிக்கொல்லிகள்,
உலோகவியல்
மற்றும்
உணவில்
கலப்படம்;
உயிரியல்
- உயிரியலின்
முக்கிய
கோட்பாடுகள்,
உயிரினங்களின்
வகைப்பாடு,
பரிணாமம்,
மரபியல்,
உடலியல்,
ஊட்டச்சத்து,
உடலநலம்
மற்றும்
சுகாதாரம்.
மனித
நோய்கள்;
சுற்றுப்புறச்
சூழல்
அறிவியல்;
நடப்பு நிகழ்வுகள்
- அறிவியல்
மற்றும்
தொழில்
நுட்பத்தில்
அண்மைக்கால
கண்டுபிடிப்புகள்;
அலகு II: புவியியல் (5 கேள்விகள்)
- புவி அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு. வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்;
- போக்குவரத்து – தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்;
- பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்;
- நடப்பு நிகழ்வுகள்
அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)
- சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு;
தேசிய மறுமலர்ச்சி
- ஆங்கிலேயர் ஆட்கிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்; தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்;
இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
- வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
அலகு IV: இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)
- இந்திய அரசியலமைப்பு – அரசிலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
- ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்;
- குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்;
- ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்;
- கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்;
- தேர்தல்
- இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி;
- பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- மனித உரிமைகள் சாசனம்;
- தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்;
- நடப்பு நிகழ்வுகள்.
அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)
இந்தியப் பொருளாதாரம்
- இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்
- ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்;
- வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி;
- பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம்
- நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவுயல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள்
- சமூகப் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை;
- சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்;
தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
- தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்;
- தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்;
- நலன்சார் அரசுத் திட்டங்கள்;
- தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்;
- நடப்பு நிகழ்வுகள்.
அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)
- தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
- சங்க காலம் முதல் இக்ககாலம் வரையிலான தமிழ் இலக்கியம்;
- திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்;
- விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு;
- தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.
பகுதி ஆ: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
(பத்தாம் வகுப்புத் தரம் – 25 கேள்விகள்)
அலகு I: திறனறிவு (15 கேள்விகள்)
- சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM); விகிதம் மற்றும் விகிதாச்சாரம்;
- தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.
அலகு II: காரணவியல் (10 கேள்விகள்)
- தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை.
பகுதி இ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
(பத்தாம் வகுப்புத் தரம் – 100 கேள்விகள்)
அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
- பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
- சந்திப்பிழை – குறில், நெடில் வேறுபாடு – லகர, ளகர, ழகர வேறுபாடு – னகர, ணகர வேறுபாடு – ரகர, றகர வேறுபாடு
- இனவெழுத்துகள் அறிதல்
- சுட்டு எழுத்துகள் – வினா எழுத்துகள்
- ஒருமைப் பன்மை அறிதல்.
சொல்:
- வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
- அயற்சொல் – தமிழ்ச்சொல்,
- எதிர்ச்சொல் – வினைச்சொல்
- எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
- இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.
அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)
சொல்லகராதி (i)
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்,
- ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல்
- ஒருபொருள் தரும் பல சொற்கள்
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
- ஒருபொருள் பன்மொழி
- இருபொருள் குறிக்கும் சொற்கள்
- பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
- சொல்லும் பொருளும் அறிதல்
- ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
சொல்லகராதி (ii)
- கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
(௭.கா.)
1. பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்)
2. வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்)
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
(எ.கா)
1. ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்)
2. சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்)
- ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக
(எ.கா) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை
- பிழை திருத்துக.
(எ.கா) ஒரு – ஓர்;
- பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
(எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி;
சொல்லகராதி (iii)
- பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம்
(எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது
- சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)
(௭.கா.)
நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன்
மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன்
தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்
- பொருள் தரும் ஓர் எழுத்து
(எ.கா.) ஆ-பசு, ஈ-கொடூ, தை-மாதம், தீ – நெருப்பு
- பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
(எ.கா) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.
அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
- தொடர் வகைகள்
- செய்வினை, செயப்பாட்டு வினை
- தன்வினை, பிறவினை
- ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
திணை மரபு:
- உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்;
- அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன;
பால் மரபு:
- ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்.
- பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்.
- பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்;
- ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது;
- பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன.
- காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது
- நேற்று வருவேன் – நேற்று வந்தேன்
- இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி
- ஒலி மரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது
- வினைமரபு: கூடைமுடை, சோறு உண்
- தொகை மரபு: மக்கள் கூட்டம், ஆட்டு மந்தை
- நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
- பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும்.
(எ.கா) search engine – தேடு பொறி,
வலசை – Migration
ஒவ்வாமை – Allergy
மரபணு – Gene
கடல் மைல் – Nautical Mile
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
- கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
- செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் -கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
- உவமைத் தொடரின் பொருளறிதல்
- மரபுத் தொடரின் பொருளறிதல்
- பழமொழிகள் பொருளறிதல்
- ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
அலகு VI : எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
- ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும்
- பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும்
(எ.கா.) pendrive, printer, computer, keyboard) –
- ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
- திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
[ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்]
- அறநூல் தொடர்பான செய்திகள்
[நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்]
- தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
- உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
- தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், விரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
- தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்
[பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரகி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்]
(குறிப்பு: அலகு VII பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto
SSLC Standard) பாடப் புத்தகங்கள அடிப்படையாகக் கொண்டது.)