பெரியாரை துணைக்கோடல்: திருக்குறள் | Periyarai-Thunaikoodal– Patience: Thirukkural
பெரியாரை துணைக்கோடல்
(நன்னெறியில் செலுத்தும் பேரறிவுடைாரைத் துணையாகக் கொள்ளுதல்)
1. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம்: அறிவிலும் ஒழுக்கத்திலும் வயதிலும் பெரியவர்களின் நட்பை ஏற்று கொள்ள வேண்டும்.
2. உற்றுநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
விளக்கம்: தமக்கு வந்த துன்பத்தை நீக்கி துன்பம் வராதவாறு காக்கும் திறமை உடையவரை நட்பாக்கி கொள்ள வேண்டும்.
3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
விளக்கம்: அறிவுமிக்க பெரியோர்களை உறவாக கொள்ள வேண்டும். அதுவே ஒருவன் பெற வேண்டிய பேறுகளுள் அரிய பேறு ஆகும்.
4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
விளக்கம்: நம்மை விட பெரியவர்களை நட்பாகி கொள்ள வேண்டும் அதுவே சிறந்த வலிமையாகும்.
5. சூழ்வார்கண் ணாகா ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
விளக்கம்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் பெரியோர்களை கண்ணாக கொண்டு நடப்பதால் மன்னனுக்கு அரச பாரம் எளிதாக தோன்றும்.
6. தக்கார் இனத்தனாய் தானொழுக வல்லானைச்
செற்றார் செய்யக்கிடந்த தில்.
விளக்கம்: பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவர்களை நடப்பவர்களுக்கு பகைவரால் எந்த தீங்கும் வராது.
7. இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
விளக்கம்: தவறுகளை சுட்டிக்காட்டும் பெரியவர்களை துணையாக கொண்டு வாழ்பவர்களை அழிக்க எவரும் இலர்.
8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
விளக்கம்: தவறுகளை சுட்டிக் காட்டும் பெரியவர்களின் துணையை மதிக்காதவன் பகைவர் இல்லை என்றாலும் தானே அழிந்து விடுவான்.
9. முதலிலார்க்(கு) ஊதிய மில்லை மதலையாம்
சார்பிலார்க் கில்ளை நிலை.
விளக்கம்: முதலீடு இல்லாத வணிகருக்கு எந்த ஊதியமும் இல்லை அதுபோல பெரியோர் துணையில்லாதவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
10. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
விளக்கம்: பெரியவர்களின் நட்பை கைவிடுவது பலரை பகைத்துக் கொள்வதை விட பல மடங்கு தீமை உடையது ஆகும்.