பொறையுடைமை : திருக்குறள் | Poraiyudaimai – Patience: Thirukkural
பொறையுடைமை
(பிறர் செய்யும் துன்பங்களை பொறுத்தல்)
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
விளக்கம்: நிலமானது தன்னை தோன்றுபவரை தாங்குவது போல், நம்மை இகழ்பவரை பொறுத்துக் கொள்வது சிறந்த செயலாகும்.
2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறுத்தல் அதனினும் நன்று.
விளக்கம்: ஒருவர் நமக்கு செய்யும் தீமையை பொறுத்துக் கொள்வதை விட மறந்து விடுவது நல்ல செயலாகும்.
3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம்: விருந்தினரை வரவேற்க முடியாத நிலை ஒருவனுக்கு வறுமையை விட மிகப்பெரிய வறுமை ஆகும். அதுபோல் அறிவு இல்லாதவர்கள் செய்யும் குற்றத்தை பொறுத்து கொள்வது வலிமையில் சிறந்த வலிமையாகும்.
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடமை
போற்றி ஒழுகப் படும்.
விளக்கம்: நற்குணங்கள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க பொறுமையை இழக்காமல் காத்துக் கொள்ள வேண்டும்.
5. ஒருத்தரை ஒன்றாக வையாரே, வைப்பர் பொறுத்தவரை பொன் போர் பொதிந்து.
விளக்கம்: தீமை செய்தவரை பொறுத்துக் கொள்ளாது தண்டிப்பவரை மதிக்க மாட்டார்கள். ஆனால் அத்திங்கை பொறுத்துக் கொள்பவரை பொன்ணை போல மதித்து போற்றுவர்.
6. ஒருத்தர்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
விளக்கம்: தீங்கு செய்தவரைப் பொறுத்துக் கொள்ளாது தண்டிப்பது அந்த ஒரு நாள் மட்டுமே மகிழ்ச்சி தரும் அதை பொறுத்துக் கொண்டவர்களுக்கு உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும்.
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று.
விளக்கம்: அறியாமையால் ஒருவர் செய்யும் தீமையை எண்ணி வருந்தித் தாமும் தீமை செய்யாது பொறுத்துக் கொள்வது சிறந்த பண்பாகும்.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
விளக்கம்: மடமையால் தீமைக்கு தமக்கு தீமை செய்தவரை பொறுமையாக இருந்து வெற்றி கொள்ள வேண்டும்.
9. துறுந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
விளக்கம்: கொடிய சொற்களை பேசுபவர்கள் முன் பொறுமையாக இருப்பது துறவிகளை விட மேலாக கருதுவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
விளக்கம்: நோன்பு இருப்பவர்களை விட தம்மை இகழ் பவர்களை பொறுத்துக் கொள்பவர்களை மேலானவர்களாக கருதுவர்.