பண்புடைமை: திருக்குறள் | Panpudaimai: Thirukkural
பண்புடைமை
1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
விளக்கம்: எல்லோரிடமும் எளிமையாக பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைவது எளிது.
2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்: அன்புடைமையும் நல்இலக்கணமும் உடைய குடியில் பிறந்தவர்கள் பண்புடையவர்களாவர்.
3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
விளக்கம்: உயிரோடு பொருந்திய பண்பினை கொண்டிருப்பது உண்மையான ஒப்பாகும்.
4. நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
விளக்கம்: நேர்மையும் நன்மையையும் கொண்டு பிறருக்கு உதவும் பண்பை உலகம் விரும்பி போற்றும்.
5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மட்டு.
விளக்கம்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தை தரும். பிறர் துன்பத்தை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமை இருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.
6. பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
அன்புக்கு மாய்வது மன்.
விளக்கம்: உலகம் பண்புடையவர்களாலே இயங்கி வருகிறது அது இல்லை என்றால் இல்லையெனில் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகும்.
7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர்.
விளக்கம்: அரம்போன்ற அறிவுடையாராயினும் மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவு கொண்ட மரத்தை போன்றவர் ஆவார்.
8. நண்பற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பற்றா ராதல் கடை.
விளக்கம்: தம்மோடு நட்பு கொள்ளாது தீமை செய்பவர் இடத்திலும் பண்புடையவராய் நடந்து கொள்ளாமை மிகவும் இழிவான செயலாகும்.
9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
விளக்கம்: யாரிடமும் பழகி பேச இயலாதவருக்கு இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகவே தோன்றும்.
10. பண்பிலால் பெற்ற பெருஞ்செல்வம் நண்பால்
கலந்தீமை யாலர்திரிந் தற்று.
விளக்கம்: அன்பில்லாதவன் பெற்ற பிரிஞ்செல்வம் யாருக்கும் பயன்படாது போனால் நல்ல பால் கலத்தின் குற்றத்தால் திரிவது போன்றது.
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
- [ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்].