வேலுநாச்சியார் (Queen Velu Nachiyar) – India's first women freedom fighter


வேலுநாச்சியார்

  • ஜனவரி 03, 1730 இல் பிறந்தார். 
  • ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய முதல் இந்திய பெண்ணரசி
  • வீரமங்கை, தென்னிந்தியாவின் ஜான்சிராணி என சிறப்பிக்கப்படுகிறார். 
  • இராமநாதபுரம் அரசர் செல்லமுத்து சேதுபதியின் மகள். 
  • சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரை மணந்தார். மகள் வெள்ளச்சிநாச்சியார்.
  • 1772 காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் இறந்த பிறகு, வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் இருவரும் எட்டு ஆண்டுகள் விருபாட்சியில் இருந்தனர்.
  • பாதுகாப்பு வழங்கியவர்கள் - திண்டுக்கல் கோபால நாயக்கர் மற்றும் ஹைதர் அலி
  • விருபாட்சியில் ஒரு படையை உருவாக்கி ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கருடன் கூட்டணி அமைத்து 1780 இல் சிவகங்கையை தாக்கி ஆங்கிலேயர் வசமிருந்து கைப்பற்றினார்.
  • வேலுநாச்சியாருக்கு இப்போரில் மருதுபாண்டியர் உதவினர்.
  • வேலுநாச்சியாரின் அமைச்சர் - தாண்டவராயப்பிள்ளை.
  • 1780 முதல் 1790 வரை பத்தாண்டுகள் சிவகங்கை ராணியாக ஆட்சி செய்தார்.
  • வேலுநாச்சியார் சிவகங்கை ராணியாக பொறுப்பேற்ற பிறகு பெரிய மருது படைத்தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
  • பெரிய மருது வளரிபடைக்கும்.
  • சின்னமருது வாள்படைக்கும் தளபதிகளாக விளங்கினார்.
  • பிற்காலத்தில் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி வேங்கண் பெரிய உடையத்தேவர் சிவகங்கை அரசரானார்.
  • வேங்கண் பெரிய உடையத்தேவர் வெள்ளச்சி நாச்சியாரை மணந்தார்.
  • 1796 இல் வேலுநாச்சியார் நோயுற்று காலமானார்.

குயிலி 

  • வீரத்தாய் என சிறப்பிக்கப்படுகிறார்.
  • வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமையேற்றவர்.
  • உடையாள் என்ற உளவாளி பெண்ணின் நினைவாக வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவு "உடையாள்" என பெயரிடப்பட்டது.
  • குயிலி பற்றிய தகவல்கள் ஜீவபாரதி என்பவர் எழுதிய வேலுநாச்சியார் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராக செயல்பட்டார். 
  • ஆங்கிலேயருக்காக உளவுபார்த்த வெற்றிவேல் என்பவரை குத்திக்கொன்றார்.
  • சிவகங்கையிலிருந்த ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கிற்குள் தன்மேல் தீயிட்டுக்கொண்டு நுழைந்து அதனை அழித்தார். 
  • உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக கருதப்படுகிறார். 
  • 1780 இல் இறந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url