Bharathidasan – The Revolutionary Tamil Poet and Social Reformer
அறிமுகம்:
பாரதிதாசன் (1891–1964) தமிழின் புரட்சிகரக் கவிஞர்
மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகப் புகழ் பெற்றவர். மகாகவி பாரதியின் தீவிர
சீடராக இருந்தவர், “பாரதிதாசன்” என்ற பெயரை ஏற்று, சமத்துவம், திராவிடம்,
மற்றும் நாகரிக விழிப்புணர்வை எடுத்துரைத்தார். அவரது கவிதைகள் சமூக
நீதிக்காகவும், தமிழரசுப் பெருமைக்காகவும் எழுந்த ஓசைகளாக இருந்தன.
பாரதிதாசன்
- காலம் : 29. 04. 1891 முதல் 21. 04. 1964
- பிறந்த இடம் : புதுச்சேரி
- பெற்றோர் : கனக சபை - இலட்சுமி அம்மையார்
- இயற்பெயர் : கனகசுப்புரத்தினம்
புனைப்பெயர் :
- கிறுக்கன்
- கிண்டல் காரன்
- பாரதிதாசன்
சிறப்பு பெயர்கள் :
- பாவேந்தர்
- புரட்சிக்கவி (அண்ணா)
- புதுமை கவிஞர்
- பகுத்தறிவு கவிஞர்
- புதுவைக்குயில்
- இயற்கை கவிஞர்
- தமிழ்நாட்டின் ரசூல் கம்சதோவ்
- பூங்காட்டு தும்பி (வாணிதாசன்)
ஆசிரியர் :
- திருப்புளிசாமி
பணி :
- நிரவி அரசு பள்ளி
- கால்வே கல்லூரி
கற்றறிந்த மொழிகள் :
- தமிழ்
- பிரெஞ்சு
நூல்கள்
- குடும்ப விளக்கு (கற்ற பெண்ணின் சிறப்பு)
- இரண்டு வீடு (நகைச்சுவை நூல்)
- அழகின் சிரிப்பு (இயற்கை பற்றியது)
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேர தாண்டவம்
- சஞ்சீவ் பர்வதத்தின் சாரல் (பொதுவுடமை பற்றியது)
- இளைஞர் இலக்கியம்
- வீரத்தாய்
- நல்ல தீர்ப்பு
- தமிழச்சியின் கத்தி
- சௌமியன்
- குறிஞ்சி திட்டு
- பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி)
- தமிழியக்கம்
- இசையமுது
- மணிமேகலை வெண்பா
- இரணியன்
- கண்ணகி புரட்சிக்காப்பியம்
- படித்த பெண்கள்
- காதல் நினைவுகள்
- காதலா கடமையா
- திருக்குறள் உரை
- முல்லைக்காடு
புகழுரை
- சுப்புரத்தினம் ஒரு கவி - பாரதியார்
- "தோன்றின் புகழோடு தோன்றுக"என்ற பொய்யா மொழியாரின் புகழ் மொழிக்கு இணங்க தோன்றியவர் பாரதிதாசன்
- அறிவு திருக்கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் - புதுமைப்பித்தன்
- பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டின் ஓர் உண்மை கவி -கு. ப. ராசகோபாலன்
சொற்றொடர்கள் :
- "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை"என்று பாடிய ரசூல் கம்சதோவ் என்ற ரஷ்ய கவிஞர் போலவே பாரதிதாசனும் விளங்கினார்.
- பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதல் எழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
- தமிழ் மொழியையும் தமிழரும் தமிழ் நாடும் சீர் பெற்று சிறக்கவே இவர் தம் பாட்டு அறிவு முழுவதையும் பயன்படுத்தினார்.
- பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்.
- பிரஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் வந்தவர்.
- இவரின் உரைநடைகள் அனைத்தும் கவிதை நடை கொண்டவை.
- குடும்ப கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதி பெருமை பெற்றவர்.
- பாரதி மீது கொண்ட பற்றின் காரணமாக பாரதிதாசன் என தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
- தன் நண்பர்கள் முன்னாள் பாடு என்று பாரதி கூற "எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி, ஏழு கடல் அவள் வண்ணமடா" என்று பாடினார்.
- இந்த பாடலை பாரதியார் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தை சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என குறிப்பிட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
- தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலிய புரட்சிகரமான கருத்துக்களை பாடு பொருளாகக் கொண்டு பாடியுள்ளார்.
- மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவற்றை பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை கூறிய அமையால் புரட்சிக் கவிஞர் என அழைக்கப்பட்டார்
- 1929 ஆம் ஆண்டு குடியரசு, பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் கவிதை கட்டுரை எழுத ஆரம்பித்தார் (இவ்விரண்டு பத்திரிகையின் ஆசிரியர் தந்தை பெரியார்)
- 1931 இல் புதுவை முரசு என்ற ஏட்டினை சிறப்பாக நடத்தினார்.
- குயில் என்ற இலக்கிய இதழை நடத்தினார்
- 1938 இல் பாரதிதாசனின் முதல் கவிதை தொகுப்பு வெளிவந்தது
- 1946 ஜூலை 29 இல் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு "புரட்சிக்கவி" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
- 1954 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவரை பின்தொடர்ந்த கவிஞர்கள் தங்களை பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள் என அழைத்துக் கொண்டனர். (முடியரசன், வாணிதாசன், சுப்புரத்தினதாசன், கம்பதாசன்)
- இவரது பாடல்கள் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
- வடமொழியில் எழுதப்பட்ட "பில்கணீயம்" என்ற காவியத்தை 1937 ஆம் ஆண்டு புரட்சி கவி என தமிழில் எழுதினார்
தகவல்கள்
- இவர் தம் பாடல்களை படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான் - சிதம்பரநாத செட்டியார்.
- 1990 இல் இவரது பாடல் நாட்டுடமை ஆக்கப்பட்டது.
- மன்னவருக்கு மன்னன், மகாகவிஞன், பேரறிஞன், தன்னேரில்லாத தமிழ் புலவன் கண் மறைந்தான் - கண்ணதாசன் (இப்பாடல் 22 . 04. 1964 மாலை முரசு இதழில் வெளிவந்தது)
- 1990 ஆம் ஆண்டு தமிழக அரசு இவர் பாடல்களை நாட்டுடைமை ஆக்கியது.
- 2001 அக்டோபர் மாதம் 09 தேதி இவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
பாரதிதாசன் சிறந்த தொடர்கள்
- தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துடித்தெழுந்தே"
- "இன்பத் தமிழ் கல்வி யாவரும் கற்றவர் என்று உரைக்கும் நிலை எய்து விட்டால்"
- "வாழ்வினில் செம்மையே செய்பவள் நீயே" (புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்)
- "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே"
- பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர் செழிக்கும் சிங்கமே!
- "என்ன ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணையளவு நலமேனும் கிடைக்கும் என்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்"
- இனிமை தமிழ் மொழி எமது - எமக் கின்பந் தரும்படி வாழ்த்த நல் லமுது"
- "எளிய நடையில் தமிழ் நூல் எழுதிய இடமும் வேண்டும்
- இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்"
- "தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்"
- "தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்"
- "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
- "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்"
- "கன்னல் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி"
- "எல்லாருக்கும் எல்லாம் என்று இருப்பதென இடம் நோக்கி நகர்கின்றது இந்த வையம்"
- கொலை வாளினை எடடா - மிகு கொடியோர் செயல் அறவே"
- "தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராய் வருதல் வேண்டும்".
- "தமிழுக்கு அமுதென்று பேர்"
- "உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே"
- "எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்"
- "தமிழன் விந்தையை எழுத தரமோ"
- "உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்ளுதமிழ்"
- "தமிழென்று தோள்தட்டி ஆடு - நல்ல தமிழ் வெல்க என்றே தினம் பாடு"
- "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே
- "தமிழை படித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே"
- "நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்"
- "இருட்டறையில் உள்ளதடா உலகம்"
- "புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"
- "பொதுவுடமைக் கொள்கையை திசையட்டும் சேர்ப்போம்"
- "மதம் மனிதனின் மாற்றுச் சட்டை"
- "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே"
- "பாரடா உன் மானிட சமூகத்தை"
- "கல்வியில்லா பெண் களர் நிலம் போன்றவள்"
- "பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுவதற்கே"
- "அகரமுதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரில்லாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்"
- "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"
- "தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்"
- "விசால பார்வையால் விழுங்கு மக்களை மானிட சமுத்திரம் நானென்று கூவு பிரிவில்லை எங்கும் பேதமில்லை"
- "தேனொக்கும் செந்தமிழே நீ கனி நான் கிளி வேறென்ன வேண்டும் இனி"
- "உறுதி உறுதி ஒன்றே சமூகம் என்று எண்ணாருக்கு இறுதி இறுதி"
- "தமிழே ஆதி தாயே வாழ்க"
- அறம்படி பொருள்படி அப்படியே இன்பம்படி
- மழையே மழையே வா வா நல்ல வானப்புனலே வா வா
- தூலம் போல் வளர்கிளைக்கு விழுதுகள் தூண்கள்
- "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் - பேத்தி நெட்டுரப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே"
முடிவுரை:
பாரதிதாசனின் எழுத்துகள் இன்று வரை தமிழர்
சமூக விழிப்புணர்வில் தீப்பொறியாக உயிர்த்திருக்கின்றன. சமதர்மம், அறிவொளி,
மற்றும் தமிழ்மொழி மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர் செய்த பணிகள் மறக்க
முடியாதவை. அவரைப் பற்றி பேசுவது, ஒரு புரட்சிகர ஆளுமையை நினைவு
கூர்வதற்கேற்பதாம். இந்தக் கட்டுரை அனைவரும் இலவசமாக வாசிக்கக்கூடியதாகும்
மற்றும் பள்ளி மாணவர்கள், TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத்
தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குப்
பிடித்திருந்தால், இந்தக் கட்டுரையை மற்றவர்களும் பகிருங்கள். நன்றி!