Bharathiyar: The Fearless Poet of Indian Independence

அறிமுகம்:

    சுப்பிரமணிய பாரதியார் என்பது தமிழர் பெருமையின் முத்திரை. ஒரு கவிஞராக, சுதந்திர போராட்ட வீரராக, சமூக சீர்திருத்தத் தலைவராக இந்தியாவின் வரலாற்றில் அவர் தனிப்பட்ட இடம் பெற்றுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவருடைய கவிதைகளில் உள்ள வீர உணர்வு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சமத்துவ சிந்தனைகள் இன்று கூட வழிகாட்டியாகின்றன. இந்தப் பதிவில், பாரதியாரின் வாழ்க்கை, இலக்கிய பங்களிப்பு மற்றும் சமூக சேவைகளை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் அறிமுகப்படுத்துகிறோம்.


Subramania Bharathiyar singing to children
Subramania Bharathiyar 


காலம் : 11. 12. 1882 முதல் 11. 09. 1921 வரை

ஊர் : எட்டையபுரம் - தூத்துக்குடி மாவட்டம் 

பெற்றோர் : சின்னசாமி - இலட்சுமி அம்மையார் 

இயற்பெயர் : சுப்பிரமணியன் 

புனைப்பெயர்கள் : 

  • இளசை சுப்பிரமணியன் 
  • காளிதாசன் 
  • சக்திதாசன் 
  • ரிஷிகுமாரன் 
  • காசி 
  • சரஸ்வதி 
  • பிஞ்சு காளிதாசன் 
  • சாவித்ரி 
  • சி. சு. பாரதி 
  • வேதாந்தி 
  • நித்தியதீரர் 
  • செல்லம்மா 
  • கிருஷ்ணன் 


பணி :

  • பேச்சாளர் 
  • பாடகர் 
  • கட்டுரையாளர் 
  • கதையாசிரியர் 
  • மொழிபெயர்ப்பாளர் 
  • அரசியல் அறிஞர் 
  • ஆன்மீகவாதி 
  • இதழாளர் 
  • மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராய் பணியாற்றினார்.
  • நான்காம் தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரை தோற்றுவித்த இடம்.


பத்திரிக்கை பணி 

  • 1904 நவம்பர் முதல் 1906 ஆகஸ்ட் வரை சுதேசமித்ரன் என்ற நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். (தென்னிந்தியாவில் வட்டார மொழிகளில் வெளியான முதல் பத்திரிக்கை)
  • ஆகஸ்ட் 1905 ஆகஸ்ட் 1906 வரை சக்கரவர்த்தி என்ற மகளிர் மாத இதழில் ஆசிரியராக பணியாற்றினார் 
  • 1905 மே  முதல் 1906 மார்ச் வரை இந்தியா என்ற வார இதழில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
  • 'விஜயா' என்ற இதழை வெளியிட்டார்.
  • சூரியோதயம, கர்மயோகி, தர்மம் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்.
  • பாலபாரதம், ஆரியங் இந்தியா போன்ற ஆங்கில இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • கர்மயோகி என்ற பத்திரிகையை அரவிந்தர் உதவியுடன் வெளியிட்டார். 
  • இவரது படைப்பு வெளிவந்த பிற இதழ்கள் - சர்வஜன மித்திரன், ஞானபாநூ, காமன்வீல், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம்.


அறிந்த மொழிகள் :

  • தமிழ் 
  • ஆங்கிலம் 
  • ஹிந்தி 
  • சமஸ்கிருதம் 
  • வங்காளம் 
  • பிரஞ்சு 
  • அரபு மொழி


சிறப்பு பெயர்கள் :

  • தேசிய கவி 
  • விடுதலை கவி 
  • மார்கவி 
  • சீட்டு கவி 
  • மக்கள் கவி 
  • புதுக்கவிதையின் தந்தை 
  • ஷெல்லிதாசன் 
  • தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி 
  • ஞானரதம் 
  • பாட்டுக்கொரு புலவன் (கூறியவர் -கவிமணி) 
  • எட்டயபுரம் ஏந்தல் 
  • பைந்தமிழ் தேர்ப்பாகன் 
  • செந்தமிழ் தேனீ 
  • சிந்துக்கு தந்தை 
  • குவிக்கும் கவிதைக்குயில் 
  • இந்நாட்டினை கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவி முரசு 
  • நீடுதுயில் நீங்க பாடி வந்த நிலா 
  • காடு கமலும் கற்பூர சொற்கோ 
  • கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல் 
  • திறம்பாட வந்த மறவன் புதிய அறம்பாட வந்த அறிஞன் என்னவென்று சொல்வேன் என்னவென்று சொல்வேன்
  • 1893இல் எட்டயபுர சமஸ்தான புலவர்களால் கலைமகள் என்னும் பொருள் தரும் 'பாரதி' என்னும் பட்டம் வழங்கப்பட்டது பாரதி சில காலம் எட்டயபுரம் அரசவை கவிஞராக விளங்கினார்.


பாரதியின் சிறந்த நூல்கள் 

  • முப்பெரும் காப்பியம் :

  1. கண்ணன் பாட்டு 
  2. குயில் பாட்டு 
  3. இசை பாடல் 
  4. பாஞ்சாலி சபதம் 

  • சிறுகதைகள் : 

  1. ஆறில் ஒரு பங்கு 
  2. திண்டின சாஸ்திரி 
  3. பூலோக ரம்பை 
  4. சொர்ணகுமாரி 

  • உரைநடை  நூல்கள் : 

  1. சந்திரிகையின் கதை 
  2. ஞானரதம் 
  3. தராசு 

  • பிற நூல்கள் : 

  1. முருகன் பாட்டு 
  2. பாப்பா பாட்டு 
  3. முரசு 
  4. அக்னி குஞ்சு 
  5. செந்தமிழ் நாடு 
  6. சுதேச கீதங்கள் 
  7. சீட்டு கவி 
  8. விநாயகர் நான்மணிமாலை 
  9. இவர் பாரத நாடு 


  • 1904 இல் மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேக பாநூ' என்ற இதழில் வெளியானது (தனிமை இரக்கம் கவிதை) 
  • அமெரிக்க கவிஞர்கள் வால்ட் விட்மன் மற்றும் கலில் கிப்ரானை பின்பற்றி தமிழில் வசனகவிதைகளை எழுதினார் 
  • உரைநடையையும், கவிதையையும் இணைத்து யாப்பிற்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை (process poetry) எனப்படும் இதை தமிழில் அறிமுகப்படுத்தியவர் (இந்தியா இதழ்) 
  • கவிதை மரபை மாற்றி எளிய மக்களை நோக்கிக் கவிதையை திருப்பி அமைத்த பெருமை பாரதியச் சாரும்.
  • பாரதியின் கவிதைகள் 20 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. 
  • மண்ணுரிமைக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் பாடியவர்.
  • 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர், கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர். தன் பாடல்களுக்கு தானே மெட்டம்மைத்தவர்.
  • மகாத்மா காந்தியின் பெருமையை உணர்ந்து முதன் முதலில் போற்றிய கவிஞர்.
  • தமிழ்நாட்டில் தமிழ் புலவர் ஒருவன் இல்லை என்னும் வசதி நீங்க வந்து தோன்றியவர்.
  • 'கேலிச்சித்திரம்' வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியை சாரும் 
  • சென்னையில் 'ஜன சங்கம்' என்ற அமைப்பை தோற்றுவித்தார்.


பாரதியின் சிறந்த தொடர்கள்

"பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் 
தமிழில் மொழி பெயர்த்தல் வேண்டும்".

"இரவாத புகழுடைய  புதுநூல்கள் தமிழ் மொழியில் ஏற்றுதல் வேண்டும்"

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்"

"காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் 
கடலும் மலையும் எங்கள் கூட்டம்".

"ஆயிரம் உண்டிங்கு சாதியெனில் 
அந்நியர் வந்து புகழென்ன நீதி" 

"பாருக்குள்ளே நல்ல நாடு நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்". 

"30 கோடி முகமுடையாள் உயிர் 

மொய்ம்புற ஒன்றுடையாள் இவள் 

செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில் 

சிந்தனை ஒன்றுடையாள்".

"மனிதன் மிகவும் இனியர் ஆண் நன்று

பெண் இனிது குழந்தை இன்பம்".

"ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா"

"என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்"

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே 

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"

காசிநகர் புலவன் பாடும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்குகோற் கருவி செய்வோம்"

"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 

மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்"

"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்".

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் 

தேன் வந்து பாயுது காதினிலே"

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் 

இனிதாவது எங்கும் காணோம்"

"தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் 

வகை செய்தல் வேண்டும்"

"பாரத பூமி பழம்பெறும் பூமி

நீரதன் புதல்வர் இந்நினைவை அகற்றாதீர்" 

"தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர்".

"சொல்லின் உயர்வே தமிழ்ச்சொல்லே"

"வயிற்றுக்கு சோறிட வேண்டும் - இங்கு 

வாழும் மனிதருக்கெல்லாம்".

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

"எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்".

"தமிழ்திரு நாடு தன்னை பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா".

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா"

"காற்றே வா, மகரந்த தூளை சுமந்து கொண்டு மனதை மயிலுறுத்து, கின்ற இனிய வாசனையுடன் வா"

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

பேணி வளர்த்திடும் ஈசன்"

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமுமின்றி 

வஞ்சனை  சொல்வாரடீ கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி"

"நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்"

"ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை ஜாதியில்"

"சுவை புதிது, பொருள் புதிது, வளம்புதிது, சொல் புதிது, சோதிமிக்க நவ கவிதை"

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்".

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்".

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்".

"பக்தி செய்வீர் ஜெகத்தீரே பயனுண்டு பக்தியினால்" 

"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு". 

"நல்லதோர் வீணை செய்தே". 

"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்". 

"கொட்டு முரசே கொட்டு முரசே".

"எண்ணிய மொழிதல் வேண்டும் 

நல்லதே என்னல் வேண்டும்".

"நாடும் மொழியும் நமதிரு கண்கள்" 

"தண்ணீர் விட்டா வளர்த்தோம் 

கண்ணீரால் காத்தோம்".

வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து 

வான்புகள் கொண்ட தமிழ்நாடு.

"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றொரு 

மணியாரம் படைத்த தமிழ்நாடு". 

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு - புகழ் 

கம்பன் பிறந்த தமிழ்நாடு".

"காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 

கண்டதோர் வையை பொறுநை நதி"

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

"பெண்மை அறிவுயரப் பெண்மை தான் 

ஒண்மையுற ஓங்கும் உலகு".

"காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்".

"பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்".

"வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்கு என்போம்".

"யாமறிந்த புலவரிலே கம்பெனை போல் 

வள்ளுவனை போல் இளங்கோவை போல் 

பூமிதனில் யங்காணுமே பிறந்ததில்லை".

"உன் கண்ணில் நீர் வழிந்தால் 

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி".

"தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் 

தர்மம் மறுபடியும் வெல்லும்".

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் 

நற்ற வானினும் நனி சிறந்தனவே"

"ஊன் மிக விரும்பும்", "தையலைப் போற்று".


புகழுரை 

  • தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியார் தகுதி பெற்றதும் - பாரதிதாசன் 
  • பாரதியார் ஒரு அவதார புருஷர், இவர் நூலை தமிழ் வேதமாக கொள்வார்களாக - பரலி சு. நெல்லையப்பர்,
  • பாரதியை நிறுத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
  • "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை.
  • தமிழ் தொண்டன் பாரதி தான் செத்ததுண்டோ" - பாரதிதாசன் 
  • "பாரதியார் ஒர் உலக கவி, அகத்திலே அன்பும், பரந்துயர்ந்த அறிவினிலை ஒளியும் வாய்ந்தோர்".  - பாரதிதாசன் 


பிற தகவல்கள் 

  • பாரதியார் பாடலை முதன் முதலில் வெளியிட்டவர் - கிருஷ்ணசாமி ஐயர். 
  • பாரதியார் பாடலை நாட்டுடைமையாக்கியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
  • எட்டையபுரத்திலும் திருவல்லிக்கேணியிலும் நினைவு இல்லம் அமைந்துள்ளது.
  • எடையுபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
  • மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் திருவுருவ சிலையை 11. 12. 1999 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


முடிவுரை:

    சுப்பிரமணிய பாரதியார் ஒரு கவிஞராக மட்டும் அல்லாமல், புரட்சி, சமத்துவம், தேசப் பற்றுக்கான பேரொலியாக இருந்தார். அவரது கவிதைகள் இன்றும் தலைமுறை தலைமுறையாக மக்களைத் தூண்டுகின்றன. இந்தக் கட்டுரை அனைவரும் இலவசமாக வாசிக்கக்கூடியதாகும் மற்றும் பள்ளி மாணவர்கள், TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குப் பிடித்திருந்தால், இந்தக் கட்டுரையை பகிருங்கள். நன்றி!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url