அறிவுடைமை: திருக்குறள் | Arivudaimai – Wisdom: Thirukkural

அறிவுடைமை


1. அறிவற்றாங் காக்கும் கருவி செறுவார்க்கும் 

உள்ளழிக்க லாகா அரண்.

விளக்கம்: அறிவு என்பது அழிவிலிருந்து நம்மை காக்கும் கருவியாகும் பகைவர்களால் அளிக்க முடியாத கருவியாகும்.


2. சென்ற இடத்தார் செலவிடா தீதொரீஇ

நன்றின்பா லுய்ப்பது தறிவு.

விளக்கம்: மனம் போகும் பாதையில் தானும் போகாமல் தீமையை விட்டு நன்மையானவற்றை செய்வதே சிறந்த அறிவாகும்.


3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்: ஏதாவது ஒரு செய்தியை யார் கூறினாலும் அச்செய்தியின் கருத்தை ஆராய்ந்து அறிவது அறிவு ஆகும்.


4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்: தான் சொல்லும் கருத்தை மற்றவர்கள் எளிதாக புரியவும் மற்றவர்கள் சொல்லும் கருத்தை புரிந்து கொள்வதும் அறிவுடையர்களின் செயலாகும்.


5. உலகந் தழீஇயது தொட்பம் மலர்தலுங்

கூம்பல இல்ல தறிவு.

விளக்கம்: உலகத்தை புரிந்து நடப்பதே சிறந்த அறிவு. தெளிவும்,  கலக்கமும் மாறிமாறி வந்தாலும் ஒரே சீராக இருப்பதே அறிவு.


6. எவ்வ துறைவ துலக முலகத்தோ

டவ்வது துறைவ தறிவு.

விளக்கம்: உலகத்தோடு ஒத்து நடப்பதே அறிவாகும் எனக்கு எல்லாம் தெரியும் என்று யார் கூறுவதையும் கேட்காமல் இருந்தால் பாவமும் பழியும் வந்து சேரும்.


7. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் 

அஃதரி கல்லா தவர்.

விளக்கம்: அறிவுடையவர்கள் எதிர்காலத்தில் வரப்போவதை அறிந்து செயல்படுவர் அறிவில்லாதவர் பின்விளைவை நோக்காது செயல்படுவர்.


8. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ

அஞ்சல் அறிவார் தொழில்.

விளக்கம்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவது அறிவுடையாரின் செயலாகும், அஞ்சாமல் இருப்பது அறிவில்லாதவர்களின் செயலாகும்.


9. எதிராகக் காக்கும் அறிவினார்க்கு கில்லை

அதிர வருவதோர் நோய்.

விளக்கம்: பின்வரப் போவதை முன்னே அறிந்து தன்னை காத்துக் கொள்பவர்கள் அறிவுடையவர்கள், அவர்களுக்கு எந்தத் துன்பமோ நோயோ வராது.


10. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் மிலர்.

விளக்கம்: அறிவுடையார் எல்லாம் உடையாராக கருதப்படுவார், அறிவு இல்லாதவரிடம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாதவராக கருதப்படுவர்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url