Kavimani Desiga Vinayagam Pillai – 👉 A Legendary Tamil Poet
✅ அறிமுகம் :
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழின் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர். இவர் எழுதிய தமிழ் இலக்கியங்கள், சமுதாயப் பங்களிப்புகள் மற்றும் தேசிய உணர்வை தூண்டும் பாடல்கள், தமிழரின் நல்வாழ்வுக்காகவே , TNPSC தேர்வுகளிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இக்கட்டுரை, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
காலம் :
- 27. 08. 1876 முதல் 26. 09. 1954 வரை
ஊர் :
- பேரூர்( குமரி மாவட்டம்)
பெற்றோர் :
- சிவதானுபிள்ளை ஆதிலட்சுமி
ஆசிரியர் :
- சாந்தலிங்க தம்புரான்
கத்தறிந்த மொழிகள் :
- தமிழ் மலையாளம் ஆங்கிலம்
பணி :
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கல்லூரி பேராசிரியர்
சிறப்பு பெயர் :
- கவிமணி (சென்னை மாநில தமிழ்ச் சங்கத்தால் 1940ல் வழங்கப்பட்டது)
- வெண்பா இற்றுவதில் வல்லவர்
- சிறந்த குழந்தை கவிஞராக போற்றப்பட்டவர்.
- பாமரனும் சுவைத்து மகிழக்கூடிய எளிய அழகிய கவிதைகளை இயற்றி புகழ் பெற்றவர்
- உமர்கய்யாமின் என்ற பாரசீக கவிஞரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிட் ஜெரால்டு என்பவரின் கவிதை வழி தமிழில் அதனை உமர்கய்யாம் பாடல்கள் என மொழிபெயர்த்துள்ளார்.
- உமர் கையாமின் இயற்பெயர் கியாதுதீன் அபுல் பாத்.
- ரூபாயத் நான்கடி செய்யுள்.
- எட்வின் அர்னால்டு எழுதிய "The light of Asia" என்பதனை ஆசிய ஜோதி என்னும் பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்.
- கல்லைப்பிசிந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானே என்று தாலாட்டு பாடியவர்.
- மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வு கட்டுரை எழுதியுள்ளார்
சிறந்த தொடர்கள் :
- "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்"
- "மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா"
- "செந்தமிழ் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்"
- "நீதி திருக்குறளை நெஞ்சார நம் வாழ்வில் ஓதி தொழுது எழுக ஓர்ந்து"
- "உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது கவிதை"
"பாட்டுக்கொரு புலவன் பாரதியோட - அவன் பாட்டை தன்னோடு ஒருவன் பாடினானடா "
"வெயிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு; கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது உண்டு"
- "தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கு துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி"
- "எவர் உடம்பிலும் சிவப்பே ரத்தம் நிறம் அப்பா எவர் விழிக்கும் உவர்பே இயற்கை குணமப்பா"
- "ஓடும் உதிரத்தில் வழிந்தொழும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் சாதிகள் தெரிவதுண்டோ"
- "சாலையில் பல தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுத்து முழங்க வேண்டும்"
- கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்.
- "மீன்கள் கோடி சூழ வெண்ணிலாவே ஒரு வெள்ளியோடம் போல் வரும் வெண்ணிலாவே"
- "உடலில் உறுதி உடையவரே உலகில் இயற்கை உடையவராம்".
படைப்புகள் :
- மலரும் மாலையும்
- நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (எள்ளல் நூல்).
- ஆசிய ஜோதி
- உமர்க்களம் பாடல்கள்
- காந்தளூர் சாலை
- தேவியின் கீர்த்தனைகள்
- இளந்தென்றல்
- பசுவும் கன்றும்
- குழந்தை செல்வம்
- கதர் பிறந்த கதை
புகழுரை :
"தேசிய விநாயகத்தின் கவி பெருமை - தினமும் கேட்பது என் செவி பெருமை" - நாமக்கல் கவிஞர்.
- கவிமணியின் கவிதைகளை புரிந்து கொள்வதற்கு பண்டிதராக வேண்டியதில்லை படிக்க தெரிந்த எவரும் பொருள் கொள்ளத் தக்க எளிய நடை - டி. கே. சண்முகம்.
✅ முடிவுரை :
தேசிய விநாயகம் பிள்ளையின் படைப்புகள் தமிழின் பாரம்பரியத்தைத் தழுவியவை. TNPSC தேர்வுகளில் அவரைப் பற்றிய கேள்விகள் வழக்கமாக வருவதால், அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு, இலக்கிய பங்களிப்புகள் ஆகியவற்றை நன்கு அறிந்திருப்பது அவசியம்.
✅ Covered topics :
- Kavimani Desiga Vinayagam Pillai TNPSC
- Tamil poet Kavimani biography
- Desiga Vinayagam Pillai important facts for TNPSC
- Kavimani works TNPSC notes
- Famous Tamil poets in TNPSC syllabus
- Group 2 Tamil literature questions
- TNPSC Group 4 Tamil writers notes
- Kavimani awards and titles
- TNPSC Tamil scholars
- Desiga Vinayagam Pillai literary contributions