கண்ணதாசன் - TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் (Kannadasan - Important Notes for TNPSC Exams)
கண்ணதாசன்
கண்ணதாசன் அறிமுகம் (Introduction)
- பிறப்பு : 24.06.1927
- ஊர் : சிறுகூடல்பட்டி - சிவகங்கை மாவட்டம்
- பெற்றோர் : சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி ஆச்சி
- இயற்பெயர் : முத்தையா
- வளர்ப்பு தாய்: தெய்வாணைஆச்சி
- வளர்ப்பு தாய் சூட்டிய பெயர் : நாராயணன்
o புனை பெயர்கள்:
- காரை முத்து புலவர்
- வணங்கா முடி
- கமக பிரியன்
- துப்பாக்கி
- பார்வதி நாதன்
- ஆரோக்கிய சாமி
o நடத்திய இதழ்கள் :
- திருமகள்
- திரைஒளி
- மேதாவி
- தென்றல்
- திரை
- தென்றல் திரை
- கண்ணதாசன்
- தமிழ் மலர்
- சண்டமாருதம்
- முல்லை
o பரிசும் பாரட்டும் :
- சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (1969).
- தமிழக அரசின் அரசவைக் கவிஞர் பட்டம் (1978)
- அண்ணாமலை அரசர் நினைவு பரிசு (1979)
- கவியரசு என்னும் பட்டம் பெற்றார்.
- சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது.
- இயற்றமிழ் கவிஞர் என அழைக்கப்பட்டார்.
- இருந்து பாடிய இரங்கற்பா பாடியவர்.
- சிறுகூடல் பட்டியிலே தோன்றிய பாட்டுப் பறவை.
- திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்தியவர் - இயக்குனர் ராம்நாத்.
- முதல் திரையிசை பாடல் "கலங்காதிரு மனமே" - படம் : கண்ணியின் காதல் (1949)
- இறுதி திரையிசை பாடல் "கண்ணே கலைமானே" - படம் : மூன்றாம் பிறை
- காதல், தத்துவம் பாடுவதில் வல்லவர்.
- கதை வசனம் எழுதிய முதல் திரைபடம் இல்லற ஜோதி.
- கங்கை காவிரி திட்டம் குறித்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்திய கவிஞர்.
- "கங்கை நதியை திருப்பியிழுத்து காவிரி வரை கொணர்வோம்"
- பாரதி கண்ட கனவு திட்டமான சேதுகால்வாய் திட்டததை நிறைவேற்ற பாடிய மற்றொரு புதுமைகவிஞர்.
- பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களிலே எடுத்தாண்டவர்.
- தன் திரைப்பட பாடல்களின் வழியே எளியமுறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
சிறந்த தொடர்கள்:
- "சீரிய நெற்றியெங்கே சிவந்த நல்இதழ்கள் எங்கே"
- "மாற்றம் எனது மானிட தத்துவம்"
- "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை".
- "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்".
- உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்"
- "செந்தமிழ்ச் சொல் எடுத்து இசை தொடுப்பேன் - வண்ணச் சந்தத்திலலே கவிதைச்சரம் தொடுப்பேன்".
- "கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்"
- "வாயும் வயிறும், ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்"
- "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
- வாசல் தோறும் வேதனை இருக்கும்".
- "போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்".
- "ஆடையின்றி பிறந்தோம் ஆசையின்றி பிறந்தோமா".
- "சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ" - (நேரு இறந்தபொழுது பாடியது)
- "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றமில்லை விதி செய்த குற்றமின்றி வேறுயாராப்பா"
- மழைகூட ஒருநாளின் தேனாகலாம், மணல் கூட ஒரு நாளின் பொன்னாகலாம் (14 மொழிகளின் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்)
படைப்புகள்:
- அர்த்தமுள்ள இந்துமதம்
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- மாங்கனி
- தை பவை
- இயேசு காவியம் ( 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகள்)
- தேர் திருவிழா
- கல்லக்குடி மாகாவியம்
- சிவகங்கை சீமை
- வேலங்குடி திருவிழா,
- ஆயிரம் தீவு
- அங்கயற்கண்ணி,
- இராச தண்டனை (கம்பர், அம்பிகாபதி பற்றிய நாடக நூல்)
வாழ்க்கை சரிதம்:
- எனது வசந்த காலங்கள்
- வனவாசம் (பிறப்பு முதல தி.மு.கவிலிருந்து பிரியும் வரை)
- எனது சுயசரிதம் (வனவாசத்தில் விடுபட்ட பகுதி)
- மனவாசம் (காங்கிரஸ் கட்சியிலிருந்த காலம்)
மறைவு:
- அமெரிக்க வாழ் தமிழர்களின் அழைப்பை ஏற்று டெட்ராய்டு நகர் தமிழ் சங்க விழாவில் கலந்து கொண்ட போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகாகோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 17.10.1981 அன்று மரணமடைந்தார்.
- Oct-22 ல் சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
- மணிமண்டம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது