Thirukkural for TNPSC: Complete Guide to Tamil Literature Questions and Exam Preparation
அறிமுகம்
TNPSC தேர்வுகளில் தமிழ் இலக்கியம் பிரிவில் திருக்குறள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. குழுமம்-1 (Group-1), குழுமம்-2 (Group-2), குழுமம்-4 (Group-4) போன்ற அனைத்து TNPSC தேர்வுகளிலும் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் வருவது உறுதி. எனவே திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய முழுமையான அறிவு TNPSC தேர்வர்களுக்கு அவசியமாகும்.
இந்த பதிவில் TNPSC தேர்வுகளுக்கு தேவையான அனைத்து திருக்குறள் தகவல்களும் விரிவாக தரப்பட்டுள்ளன.
திருக்குறள்
- திருக்குறள் - திரு + குறள்.
- குரள் - குறுகிய அடிகளை உடையது.
- இரண்டு அடிகளால் ஆன குறள் வெண்பாக்களால் ஆனது.
- திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
- திரு - செல்வம், உயர்வு என்னும் அடைமொழி பெற்று திருக்குறள் என்றானது.
- குறள் வெண்பாக்களால் ஆனது.
திருக்குறள் முப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள் - 4 இயல்கள்
- பாயிறவியல் - 4 அதிகாரங்கள்
- இல்லறவியல் - 20 அதிகாரங்கள்
- துறவரவியல் - 13 அதிகாரங்கள்
- ஒளியியல் - 1 அதிகாரம்
(தனிமனித வாழ்வினைப் பற்றிக் கூறுவது)
பொருட்பால் - 70 அதிகாரங்கள் - 3 இயல்கள்
- அரசியல் - 25 அதிகாரங்கள்
- அங்கவியல் - 32 அதிகாரங்கள்
- ஒலிபியல் - 13 அதிகாரங்கள்
(சமுதாய வாழ்வினைப் பற்றிக் கூறுவது)
காமத்துப்பால் - 25 அதிகாரங்கள் - 2 இயல்கள்
- களவியல் - 7 அதிகாரங்கள்
- கற்பியல் - 18 அதிகாரங்கள்
(அக வாழ்வைப் பற்றிக் கூறுவது)
- திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
- 9 இயல்களைக் கொண்டது.
- உலகம் மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவே பெரியது. அதிகப் பாடல்களை கொண்டது.
- இந்நூல் முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
- "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" இதில் நாலு என்னும் நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளின் அருமையும் விளக்குகிறது.
திருக்குறளின் சிறப்பு பெயர்கள்
- உலகப் பொதுமறை
- முப்பால்
- வாயுறை வாழ்த்து
- பொதுமறை
- பொய்யாமொழி
- தெய்வ நூல்
- தமிழ்மறை
- முதுமொழி
- உத்திரவேதம்
- திருவள்ளுவம்
- வள்ளுவப் பயன்
- காலம் கடந்த புதுமை நூல்
- ஈரடி வெண்பா
- உலக பொது நூல்
- தமிழ் மாதின் இனிய உயர்நிலை
- பொருளுரை
- தமிழர் மறை
- அற இலக்கியம்
- தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல்
திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர்
- தருமர்
- தாமதத்தர்
- பரிதி
- திருமலையர்
- பரிப்பெருமாள்
- மணக்குதவர்
- நச்சர்
- பரிமேலழகர்
- மல்லர்
- காளிங்கர்
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர்.
"தருமர், மணக்குடவர், தாமதத்தர், நச்சர்,
பரிதி, பரிமேலழகர் - திருமலையார்,
மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுறை செய்தார் இவர்".
- திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தில் முந்தியவர் தருமர்.
- திருக்குறளுக்கு உரை எழுதியவர்களால் காலத்தால் பிந்தியவர் பரிமேலழகர்.
- மு.வ. நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோர் உரை எழுதியுள்ளனர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்).
திருவள்ளுவர்
- திருக்குறளை இயற்றியவர்.
- இவரது காலம் கி.மு 31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
- இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
- இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.
திருவள்ளுவர் சிறப்புப் பெயர்கள்
- செஞ்ஞாப்போதார்
- தெய்வப்புலவர்
- நாயனார்
- முதற்பாவலர்
- நான்முகனார்
- மாதானுபங்கி
- பெருநாவலர்
- பொய்யில் புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
திருவள்ளுவரின் காலம்
- கி. மு. 1 - பி. ஆர். ஆர். தீட்சிதர்
- கி. மு. 31 - மறைமலை அடிகள் இதை நாம் பின்பற்றுகிறோம்.
- கி. மு. 1 முதல் 3 - இராசாமாணிக்கனார்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு
- இலத்தின் - வீரமாமுனிவர்
- ஜெர்மன் - கிரால்
- ஆங்கிலம் - ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், ராஜாஜி, எல்லீஸ் துரை.
- பிரஞ்ச் - ஏரியல்
- வடமொழி - அப்பாதீட்சிதர்
- இந்தி - பி.டி.ஜெயின்
- தெலுங்கு - வைத்தியநாதப் பிள்ளை
- உலக மொழிகளில் பல மொழிகள் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.
- 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சிறப்பு
- தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படுவது.
- மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை திருக்குறள்.
- அணுவை துளைத்த கடலைப் புகட்டி குறுகத் தரித்த குரள் - அவ்வையார்.
- கடுகைத் துளைத்தேழ் கடலை புகட்டிக் குறுகத் தறித்த குறள் இடைக்காடனார்.
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்.
- வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்.
- இணையில்லை முப்பாலுக்கு இன் நிலத்தே - பாரதிதாசன்.
- உலகினில் நாகரிக முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புது புதுப்பித்து விடலாம் - கால்டுவெல்.
- சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயில தொடங்கினேன்.
- காந்தியடிகள் உருசிய நாட்டில் அணு துளைக்காத கிராமின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
- இங்கிலாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் (bible) வைக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து நாட்டு விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
- திருக்குறள் ஒரு வகுப்பருக்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாருக்கோ, உரித்ததன்று. அது மன்பதைக்கு உலகுக்குப்பொது - திருவிக.
- திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் இன்னும் ஓர் நூல் தோன்றினாவிட்டால் ஒரு மொழி இருப்பதாக உலகத்திற்கு தெரிந்திருக்காது - கி.ஆ.பெ.விசுவநாதம்.
முக்கிய அடிகள்
- அறத்தான் வருவதே இன்பம்
- மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
- திருவேறு தெள்ளியராதலும் வேறு
- பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
- ஊழிற் பெருவழி யாவுள
- முயற்சி திருவினையாக்கும்
- இடுக்கண் வருங்கால் நகுக
- கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
- ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
பதிப்பு
- மலையத்துவச்சன் மகன் ஞானபிரகாசம் 1812இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
திருக்குறள் ஆராய்ச்சி செய்திகள்
'அ' தொடங்கி 'ஞ' கரத்தில் முடியும் நூல்.
திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள் அனைத்தும் மற்றும் குவளை.
திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம் நெருஞ்சி பழம்.
திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை குன்றிமணி.
திருக்குறளில் இடம்பெற்ற மரங்கள் பனை மற்றும் மூங்கில்.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து ஔ.
திருக்குறளின் பத்து அதிகாரங்கள் உடமை என்னும் பெயருடன் அமைந்துள்ளது.
குடும்பம் என்னும் சொல் முதலில் இடம் பெற்ற நூல்.
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.
திருக்குறளில் இரு முறை இடம் பெற்றுள்ள அதிகாரம் குறிப்பறிதல்.
திருக்குறளில் 10 அதிகார பெயர்கள் "உடமை" எனும் சொல்லில் அமைந்துள்ளன.
அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடமை, பொறையுடமை, அருள்உடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினை உடமை, பண்புடைமை, நாணுடைமை.
திருக்குறளுக்கும் 7 என்ற எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
ஏழு சீரால் அமைந்தது
ஏழு என்னும் என்னும் பெயர் "எட்டு" குறட்பாக்களில் உள்ளது.
அதிகாரங்கள் 133 (1+3+3=7)
குறள்கள் 1330 (1+ 3+3+0=7)
திருவள்ளுவமாலை
- திருக்குறளின் சிறப்புகளை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
- திருவள்ளுவமாலை என்பது திருக்குறளின் பெருமையை குறித்து சான்றோர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
- இந்நூலில் 55 பாடல்கள் உள்ளன.
- 53 புலவர்களால் பாடியுள்ளனர்.
- "தினை அளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; மனையளகு வள்ளைக் (கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா வரி - கபிலர்.
முடிவுரை
திருக்குறள் வெறும் இலக்கிய நூல் அல்ல; அது ஒரு வாழ்க்கை வழிகாட்டி. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டிய வழி முறைகளை தெளிவாக எடுத்துரைக்கும் இந்த நூல், இன்றைய அவசர உலகில் நமக்கு பெரிதும் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு குறளும் ஒரு வைரம் போன்றது - எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒளிர்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் நேர்மை, கருணை, பொறுமை, நன்றி போன்ற நல்லிணங்களை வளர்த்துக் கொள்ள திருக்குறள் சிறந்த ஆசானாக இருக்கிறது.
தமிழர்களின் பெருமையாக மட்டுமின்றி, உலக மனித குலத்தின் பொதுச் சொத்தாக திகழும் திருக்குறளை நாம் மீண்டும் மீண்டும் படித்து, நம் வாழ்க்கையில் அதன் உன்னத கருத்துக்களை செயல்படுத்துவோம். அதுவே திருவள்ளுவப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
"குறள் வாழ்க்கை வழி காட்டும் விளக்கு" - இந்த உண்மையை உணர்ந்து அதன்படி வாழ்வோம்.