
- 1898 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் பிறந்தார்.
- தந்தை முனுசாமி.
- தாயார் - மங்களம்.
- 1913 ஆம் ஆண்டு இந்திய திருமணங்கள் செல்லாது என தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் அறிவித்த போது அதற்கு எதிராக போராடினார்.
- 23.12.1913 ஆம் ஆண்டு வால்க்ரஸ்ட் இடத்தில் நடந்த அறப்போராட்டத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டு மாரிட்ஸ்பர்க் சிறையில் மூன்று மாதம் அடைக்கப்பட்டார்.
- எனது சகோதரியின் மரணத்தை விட வள்ளியம்மையின் மரணம் எனக்கு பேரிடியாக அமைந்தது என காந்தியடிகள் கூறினார்.
- காந்தியடிகள் வள்ளியம்மையின் தியாகம் குறித்து இந்தியன் ஒபினியன் என்ற பத்திரிகையில் எழுதினார்.
- 22.02.1914 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் காலமானார்.
- வள்ளியம்மையின் மரணத்தை காந்தியடிகள் "இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.
- தென்னாப்பிரிக்கா வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நிலைத்து நிற்கும் என "தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்" என்ற புத்தகத்தில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
- வள்ளியம்மையை சிறப்பிக்கும் பொருட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் சென்னையிலுள்ள தனது 600 ஆவது கிளைக்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை எனப்பெயரிட்டுள்ளது.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பெண் புலி குட்டிக்கு வள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- மத்திய அரசு வள்ளியம்மை பெயரில் அஞ்சல் உறை மற்றும் ₹5 அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
History